ஹைதராபாத், :ஓஸ்மானியா பல்கலைக்கழக விடுதியில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் ஓஸ்மானியா பல்கலை செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவ – மாணவியருக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. கடந்த 2019ல் மாணவியர் விடுதியின் பின்பக்க சுற்றுச்சுவர் வழியே ஏறிக் குதித்து உள்ளே நுழைந்த மர்ம நபர், மாணவி ஒருவரை கத்தியை காட்டி மிரட்டினார்.
மாணவியரின், ‘மொபைல் போன்’களை திருடும் நோக்கத்துடன் அவர் உள்ளே நுழைந்தது தெரிய வந்தது. மாணவியர் கூச்சலிட்டதை அடுத்து அவர் தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை, மாணவியர் விடுதியின் பாதுகாவலர்களாக பல்கலை நிர்வாகம் நியமித்தது.
இந்நிலையில், அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த வகையில், விடுதியில் மனித நடமாட்டத்தை கண்டறிந்து அபாய ஒலி எழுப்பக் கூடிய, ‘சென்சார்’கள் பொருத்தப்பட உள்ளன.
விடுதியின் சுவர் ஏறிக் குதித்தாலோ, மனித நடமாட்டம் உணரப்பட்டாலோ, சென்சார்கள் அபாய ஒலியை எழுப்பும்.
இந்த ஒலி, மாணவியர் விடுதியின் பாதுகாப்பு அதிகாரி அறை மற்றும் கட்டுப்பாட்டு அறைகளில் கேட்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement