சவுதி அரேபியாவில் மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர் ராஜேஷ் குமார் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதில் கண் பார்வை பறிபோனது. இதனை அடுத்து எனபவர் ராஜேஷ்குமார் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சவுதி அரேபியாவில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சவுதி அரேபியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மனு அளித்துள்ளது.
சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் ஒருவர் கடற்கொள்ளையர்களால் சுடப்பட்டு கண் பார்வை பறிபோன சம்பவம் மீனவர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.