கடலூர் : ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து, இன்று ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அழகிய நிலையில் இந்த ஆண் சடலம் மீட்கப்பட்டதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில்\ ஆழ்ந்துள்ளனர். மீட்கப்பட்ட அந்த ஆண் சடலம் அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது, குடிநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட அந்த ஆண் சடலம், அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அழுகிய சடலம் இருந்த குடிநீரை ராஜேந்திரபட்டினம் கிராம மக்கள் பயன்படுத்தியதால், அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்ய அதிகாரி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.