கனடாவில் உள்ள பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோவில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இது இந்திய சமூகத்தினரிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் திங்கள்கிழமை (உள்ளூர் நேரப்படி) கௌரி சங்கர் மந்திரில் நடந்த நாசவேலைக்கு கண்டனம் தெரிவித்தது. இந்தச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது என்று கூறினார்.
தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய பாரம்பரியத்தின் சின்னமான பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் கோயிலில், இந்திய எதிர்ப்புவாசங்கள் எழுதபப்ட்டு, சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறுக்கத்தக்க நாசகாரச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தியுள்ளது. கனடா அதிகாரிகளிடம் இவ்விவகாரம் குறித்து எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம். “பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார் மற்றும் கனேடிய அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். “இந்த வெறுக்கத்தக்க நாசகார செயலுக்கு எங்கள் நாட்டில் இடமில்லை,” இந்த வெறுப்பு குற்றம் குறித்த தனது கவலைகளை பீல் பிராந்திய காவல்துறைத் தலைவர் நிஷான் துரையப்பாவிடம் தெரிவித்ததாக பிராம்ப்டன் மேயர் ட்வீட் செய்துள்ளார்.
“ஒவ்வொருவரும் தங்கள் மத வழிபாட்டில் பாதுகாப்பாக உணர தகுதியுடையவர்கள்” என்று பிராம்ப்டன் மேயர் கூறினார். கனடாவில் கோவில் ஒன்று சேதப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக செப்டம்பர் 2022 இல், கனடாவில் உள்ள BAPS சுவாமிநாராயண் மந்திர், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு `கனடாவில் உள்ள காலிஸ்தானி தீவிரவாதிகளால்’ சிதைக்கப்பட்டது.
மேலும் படிக்க | கனடாவில் தொடரும் என்.ஆர்.ஐ கொலைகள்! 24 வயது சீக்கிய இளைஞர் துப்பாக்கிச்சூட்டில் பலி
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா தனது ட்விட்டர் பதிவில், “கனடாவில் உள்ள காலிஸ்தானி தீவிரவாதிகளால் ரொறொன்ரோ BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திரை நாசப்படுத்தியதை அனைவரும் கண்டிக்க வேண்டும். இது ஒரு முதல் முறை நடக்கும் நிகழ்வு அல்ல. சமீப காலமாக கனடாவில் உள்ள இந்து கோவில்கள் இதுபோன்று குறிவைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிரேட்டர் டொராண்டோ ஏரியாவில் (ஜிடிஏ) ரிச்மண்ட் மலையில் உள்ள விஷ்ணு கோயிலில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை ஜூலை 2022 இல் சிதைக்கப்பட்டது. இரண்டு நிகழ்வுகளிலும், காலிஸ்தான் சார்பு கோஷங்கள் வர்ணம் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவான நபர்களால் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஜனவரி 29 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தேசியக் கொடியை கையில் ஏந்திய இந்தியர்கள் மீது காலிஸ்தானி சார்பு குழுக்களைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தானி குழுவினர் அவர்களைத் தொடர்ந்து தாக்கியபோது இந்தியக் குழு சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓடுவதைக் காண முடிந்தது. ஒரு நபர் இந்தியக் கொடியை உடைத்து தரையில் வீசினார். ஆஸ்திரேலியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா இன்று மெல்போர்னில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோயிலுக்குச் சென்று, “காலிஸ்தானிக்கு ஆதரவான சக்திகளால்” தாக்கப்பட்டதைக் கண்டித்தார். மேலும், “வழிபாட்டுத் தலம் எல்லாச் சமூகங்களாலும், நம்பிக்கைகளாலும் எப்போதும் போற்றப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இந்திய தூதர் வோஹ்ரா மெல்போர்னில் உள்ள BAPS ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயிலுக்கு சென்று வழிபட்டார் மற்றும் கோவிலின் சமீபத்திய சேதம் குறித்த இந்திய சமூகத்தின் கவலைகள் குறித்து விவாதித்தார். ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடந்த வன்முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மெல்போர்னின் மில் பார்க் பகுதியில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோவிலை, மில் பார்க் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கோவிலின் சுவர்களில் இந்திய எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட இந்திய எதிர்ப்பு சக்திகளால் நாசப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா டுடே தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Canada PR: நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்தியது கனடா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ