அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக கட்சியின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கிய நிலையில், சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை சிவா மற்றும் பழனிவேல் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீண்டும் ஆண்டிமடம் தாலுக்காவை சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க வேண்டும்.
சாதாரண மக்கள் முதல் ஆளுநர் வரை மிரட்டும் வகையில் செயல்படும் விசிக கட்சியை தடை செய்ய வேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.