சீனாவின் கைக்கூலி தான் பிபிசி; பாஜக எம்பி சாடல்.!

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணபடத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் கடந்த 24ஆம் தேதி வெளியானது.

இதனிடையே, பிரதமர் மோடி தொடர்பாக யூ-டியூபில் வெளியான பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிபிசி ஆவணப்படம் நீக்கப்பட்டது ஒன்றிய அரசின் சட்டவிரோத நடவடிக்கை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதி 16ன் கீழ் அமைச்சகம் அவசரகால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெயரிடப்படாத ஆதாரங்களின்படி, யுடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் இந்தத் தடைக்கு இணங்கி, வீடியோ மற்றும் ட்வீட்களின் இணைப்புகளை நீக்கியுள்ளன.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய பாஜக அரசு விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதியன்று, அதாவது அடுத்த திங்கள் கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் சீனா தான் பிபிசி ஆவணப்படம் எடுக்க மூலக்காரணம் என பாஜக எம்பி தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மாலனி கூறும்போது, ‘‘பிபிசி ஏன் இந்தியாவுக்கு எதிரானது? ஏனெனில், சீன அரசுடன் இணைக்கப்பட்ட Huawei நிறுவனத்திடம் இருந்து எடுத்து, பிபிசியின் நிகழ்ச்சி நிரலை தொடர போதுமான அளவு பணம் தேவைப்படுகிறது. பிபிசி விற்பனைக்கு உள்ளது’’ என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கூறும்போது,‘‘சீனர்களின் அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்படும் பல சீன நிறுவனங்கள் பிபிசியுடன் தொடர்புகளை கொண்டுள்ளன என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிபிசியை வாங்கியதும் அனைவரும் அறிந்ததே. எனவே, பிபிசி உடனான சீன ஸ்தாபனமும், நமது எதிர்ப்பையும் வைத்து, இந்தியாவின் வளர்ச்சிக் கதையை முடக்க இந்த ஆவணப்படத்தைப் பயன்படுத்துகிறது.

மேலும், “பிரதமர் மோடியை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதன் பொதுப் பேச்சு என்னவாக இருக்க வேண்டும் என்பதை வெளிநாட்டு ஊடக நிறுவனம் இந்தியாவிற்கு ஆணையிட முடியாது. அத்தகைய தலையீட்டை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ‘‘பாஜக எம்பியிடம் உறுதியான ஆதாரம் இருந்தால், (சீன நிதியுதவி பிபிசி தொடர் குறித்து அவர் பிரிட்டனில் உள்ள தகுந்த கண்காணிப்பு அமைப்புக்குச் சென்று பிபிசியை அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இது மிகவும் குழந்தைத்தனமானது.

பெங்களூருவில் ஜி20 அமைப்பின் எரிசக்தி மாற்ற பணிக் குழு கூட்டம்!

ஆவணப்படம் உண்மையில் தவறானது என்று அரசாங்கம் நம்பினால், அவர்கள் அதைத் தடை செய்வதற்குப் பதிலாக எதிர்க் கதையுடன் வர வேண்டும். இந்த நவீன யுகத்தில் எதையும் தடை செய்ய முடியாது. மக்கள் அதற்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பார்கள், அதைப் பார்ப்பார்கள். மக்கள் அதைப் பரப்பி விநியோகிப்பார்கள். அவர்கள் உண்மையிலேயே சீனாவைப் பற்றி பேச விரும்பினால், அவர்கள் இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் மற்றும் நமக்குச் சொந்தமான நிலத்தில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றி பேச வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.