சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வழித்த டங்களில் தண்டவாள சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி வரும் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு இடங்களில் நடக்கவுள்ளது. இதனால், கோட்ட பகுதியில் இயங்கும் சேலம்- கோவை ரயில், விருத்தாச்சலம் ரயில் உள்பட 6 ரயில்கள், ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, கோவை – சேலம் எக்ஸ்பிரஸ் (06802) வரும் பிப்ரவரி 3, 4, 6, 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் சேலம் – கோவை எக்ஸ்பிரஸ் (06803) வரும் பிப்ரவரி வரும் 3, 4, 6, 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளது.
இதேபோல், கரூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் (06882) வரும் பிப்ரவரி 14, 21, 28ம் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் திருச்சி- கரூர் எக்ஸ்பிரஸ் (06123) வரும் பிப்ரவரி 14, 21, 28ம் தேதிகளிலும், விருத்தாச்சலம் – சேலம் ரயில் (06121), சேலம் – விருத்தாச்சலம் ரயில் (06896) ஆகியவை வரும் 21, 28ம் தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (16844) வரும் 14, 21, 28ம் தேதிகளில் ஒரு பகுதியாக கரூர்-திருச்சி இடையே ரத்து செய்யப் பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருச்சி – பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் வரும் 14 21, 28 ஆகிய தேதிகளில் ஒரு பகுதியாக கரூர் திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறு மார்க்கத்தில் திருச்சி பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 14 , 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சி கரூர் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் கரூரில் இருந்து புறப்பட்டு பாலக்காடு டவுன் வரை மட்டுமே சொல்கிறது திருச்சி ஈரோடு எக்ஸ்பிரஸ் 14, 21, 2 8ஆம் தேதிகளில் திருச்சி கரூர் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே டெல்லி கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.