வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறும் ‘ஜி – 20’ மாநாட்டை முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு படையினர் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நுாறடி சாலை, மரப்பாலம் சந்திப்பில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில், ‘ஜி -20’ அமைப்பின் இரண்டு நாள் மாநாடு நேற்று காலை துவங்கியது.
மாநாட்டில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேசியா உள்ளிட்ட 11 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
மாநாட்டிற்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், மாநாடு நடைபெறும் இடம் மற்றும் மாநாட்டு பிரதிநிதிகள் தங்கியுள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
மேலும், சென்னை தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) பிரிவை சேர்ந்த 20 வீரர்கள், மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள உயர்ந்த கட்டடங்களின் மீது இருந்து, அதிநவீன தொலைநோக்கி மற்றும் துல்லியமாக சுடும் அதி நவீன துப்பாக்கி, வயர்லெஸ் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement