தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், தமிழ்நாட்டில் தற்போது ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. இதனால் அரசியலில் மக்கள் நம்பிக்கையை பெரிதும் மாற்றியிருக்கிறது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலானது முந்தைய தேர்தல்களை போல் இருக்காது.
பூத் கமிட்டிகள்
வாக்கு வங்கி அரசியலில்
திமுக
, அதிமுக என இரண்டு கட்சிகளும் தான் மாறி மாறி அலையை உருவாக்கி வந்துள்ளன. தற்போது பாஜக புதிய அலையை உருவாக்க தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் 68 ஆயிரம் பூத்கள் இருக்கின்றன. இவற்றில் அடித்தளத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். அதற்கான அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறோம். அனைத்து தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள் நடத்துகிறோம்.
வேட்பாளர்கள் தேர்வு
மக்களை நெருங்கி செல்கிறோம். பூத் கமிட்டிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்குகிறோம். முதல்முறை பூத் கமிட்டிகளுக்கு போதிய ஆட்களை நியமித்து சரியான முறையில் வேலை செய்ய வைக்க ஆரம்பித்துள்ளோம். படிப்படியாக எங்களுக்கான இடம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. மற்றொரு முக்கியமான விஷயம் பாஜகவிற்கு பின்னடைவாக இருக்கிறது.
முதல் தலைமுறை அரசியல்வாதிகள்
வேட்பாளர்கள் தேர்வு. அதிமுக, திமுகவில் 30, 40 ஆண்டுகாலம் அரசியல் செய்தவர்கள். மூன்று, நான்கு முறை எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள், அவர்களின் வாரிசுகள் என வேட்பாளர்களை நிறுத்தி மக்களை கவர்ந்து விடுகின்றனர். ஆனால் பாஜகவில் இளம் தலைமுறை, முதல் தலைமுறை அரசியல்வாதிகளை உருவாக்குகிறோம்.
அடுத்தடுத்த தேர்தல்கள்
இதனால் மக்கள் மத்தியில் எங்கள் கட்சிக்கான செல்வாக்கு உடனடியாக உருவாவதில் சிக்கல் நிலவுகிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் எழுச்சியை பார்க்கலாம். 2026 சட்டமன்ற தேர்தலில் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள். தமிழ்நாட்டில் பாஜகவிற்கென்று ஒரு அலை உருவாகி விட்டது. அப்படியே அந்த வாக்கு வங்கியை கைப்பற்றி மக்களவை தேர்தலில் எங்களின் வலிமையை காட்டுவோம்.
பெண் நிர்வாகிகள்
பாஜகவில் பெண்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனர். பலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில், மாநில அளவில் பதவிகள் வழங்கியுள்ளோம். மாவட்ட செயலாளராக எந்த ஒரு பெண்ணிற்கும் திராவிட கட்சிகளும் சரி. மற்ற கட்சிகளும் சரி. பொறுப்புகள் வழங்கியது இல்லை. ஆனால் பாஜக வழங்கியுள்ளது.
சிறப்பாக பங்களிப்பு
தற்போது இரண்டு பெண்கள் மாவட்ட தலைவர்களாக இருக்கின்றனர். அவர்களின் செயல்பாடுகள் மொத்தமுள்ள 66 பேரில் டாப் 10ல் இடம்பிடித்துள்ளனர். இவர்களை பார்த்து மேலும் பல பெண்கள் வருவார்கள். அவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கி கட்சியில் உயர்ந்த பொறுப்புகள் வழங்குவோம். இத்தகைய அங்கீகாரம் பெண் வாக்காளர்களை கவர பெரிதும் உதவும் என நம்புகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.