தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 30 ஆம் தேதி மாலை அதிகாரப்பூர்வமாக வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை கொடுத்தார். விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன் என அவர் கொடுத்த தளபதி 67 அறிவிப்பு சில நிமிடங்களிலேயே டிவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. அவரது அறிவிப்பை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67-ல் இணைவது மகிழ்ச்சியளிப்பதாக கூறியது.
மேலும், படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டது. மீண்டும்மொருமுறை விஜய்யுடன் இணைந்திருக்கிறார் அனிரூத். அவரும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தளபதி 67 இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், படம் நியூக்ளியர் பிளாஸ்ட் போல் இருக்கும் என கூறியுள்ளார். ஆனால், ஹீரோயின் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரிஷா நடிப்பதாக பேச்சுகள் அடிப்பட்ட நிலையில், பிரியா ஆனந்த் தளபதி 67-ல் நடிப்பது இப்போது உறுதியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பிரியா ஆனந்த் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
இதற்கு பிரியா ஆனந்தும் ஹார்டின் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தளபதி 67-ல் பிரியா ஆனந்தின் என்டிரி தளபதி ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளது. அவருக்கான கதாப்பாத்திரம் என்ன? என்பது குறித்த ஆராய்ச்சிகளை இப்போதே தொடங்கிவிட்டனர்.
— Priya Anand (@PriyaAnand) January 31, 2023
இவரைத் தவிர மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் தளபதி 67ல் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் மெகாஹிட் வெற்றியில் மகிழ்ச்சியில் இருக்கும் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.