திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி எடுத்து பழனி முருகன் கோவிலை நோக்கி பாதயாத்திரை தொடங்கியுள்ளனர். நெற்குப்பை, கண்டனூர், காரைக்குடி அரண்மனை பொங்கல் உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாரம்பரிய மிக்க வைரவேல் சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை தரிசிப்பது வழக்கம். அதன்படி பழமை மாறாமல் சர்க்கரை காவடி எடுத்து நகரத்தார்கள் நடந்தே பழனிக்கு பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர்.
பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் தைப்பூசத்தன்று பழனி சென்றடைவார்கள். அதன் பின் பிப்ரவரி 6ம் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்திய பின் அவர்கள் நடந்தே வீடு திரும்புவார்கள். வாணீர்பஜனை மடத்திற்கு இன்று காலை பாரம்பரிய மிக்க நகரத்தார் காவடிகள் வைரவேலுடன் வந்து சேர்ந்தனர். 291 சர்க்கரை காவடிகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குன்றக்குடியிலிருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு நத்தம் வந்தடையவுள்ளனர்.