திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், தரிசனத்திற்கு பல மணி ஆனது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென பக்தர்களின் வருகை குறைந்தது. இதனால், 74 ,242 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 25 ,862 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.4.8 கோடி கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 2 அறைகள் மட்டுமே பக்தர்களாால் நிரம்பியது. இதனால், பக்தர்கள் 8 மணிநேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.