டெல்லி: திருமண பந்தத்தை மீறிய உறவுக்காக ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமண பந்தத்தை மீறிய உறவு தண்டனைக்குரிய குற்றம் அல்ல என 2018-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு ராணுவத்துக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது. ராணுவ சட்டத்தின்படி ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உ உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.