சென்னை: பதிவுத் துறையின் வருவாய் நடப்பு ஜனவரி மாத முடிவில் ரூபாய் 14,043 கோடியை எட்டியது. கடந்த நிதியாண்டின் மொத்த வரிவசூலான ரூபாய் 13,914 கோடியை ஜனவரி மாதத்திலேயே அடைந்து பதிவுத்துறை வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.