சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 471 நாட்கள் அண்ணாமலை தலைமையில் நடைபயணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான திட்டமிடல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆதரவு யாருக்கு என்பதை அண்ணாமலை நாளை அறிவிக்கவிருப்பதாக தெரிகிறது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இடைத்தேர்தலில் போட்டியிட பெரும்பாலான பாஜக நிர்வாகிகள் விரும்புவதாகவும் தெரிவித்தார். எங்களின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும், அது தவறில்லை எனவும் அவர் கூறினார்.