வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. குதிரைப்படை வீரர்கள் புடைசூழ பார்லி., வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. பார்லி., வளாகத்திற்கு வந்த ஜனாதிபதியை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் , பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா, வரவேற்றனர்.
இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளின் கூட்டு கூட்டம் பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கிறது .
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு பகுதிகளாக நடக்கவுள்ளது. முதல் அமர்வு பிப். 13 வரை நடக்கும். அடுத்த அமர்வு மார்ச் 13ல் துவங்கி ஏப். 6 வரை நடக்கவுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் என்பதால் இதில் புதிய வரி விதிப்புகள் எதுவும் இருக்காது என தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement