பிரேசிலில், பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அலெம் பரைபா (Alem Paraiba) நகரில் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Vila Maria Helena கால்பந்து கிளப்பை சேர்ந்த அணிகள், கோபா தேசிய போட்டியில் கோப்பையை வென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.