2006-ம் ஆண்டு வெளிவந்த ‘கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா.அதையடுத்து விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அது தான் இலியானா நடித்த கடைசி தமிழ் படம். அதன் பிறகு எந்தத் தமிழ் படத்திலும் இலியானா நடிக்கவில்லை. தெலுங்கிலும் பெரிதாக படங்கள் நடிக்கவில்லை.
இதையடுத்து இந்திக்கு சென்ற அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இலியானாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் கையில் ஊசி குத்ததப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்படும் புகைப்படம் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்தள்ள இலியானா, எல்லோரும் எனது உடல் நலம் குறித்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது அன்பு கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நான் தற்போது நலமாக உள்ளேன். சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.