அனுப்பூர், மத்திய பிரதேசத்தில், 7 வயது சிறுமி புடவையில் விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அனுப்பூர் மாவட்டம் பஹாரியா கிராமத்தில் வசித்த 7 வயது சிறுமி, தன் வீட்டிற்கு வெளியே உள்ள சுவரில் தொங்க விடப்பட்டு இருந்த புடவையில் நேற்று விளையாடினார்.
அப்போது எதிர்பாராத வகையில், புடவைசிறுமியின் கழுத்தை இறுக்கி சுற்றியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement