புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. விபத்தில் காயமடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு சுசீந்திரன்(27) உயிரிழந்தார். கடந்த 17ம் தேதி வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து நடந்தது.