மகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க நடிகரும், பாடகருமான நிக் ஜோனஸை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் கணவருடன் வசித்து வரும் இந்த ஜோடி வாடகைத் தாய் மூலம் கடந்த வருடம் ஜனவரியில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றார்கள்.
ஒரு வருடத்திற்கும் மேலாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத பிரியங்கா, தனது மைத்துனரின் 'வாக் ஆப் பேம்' நிகழ்ச்சியில் மகளுடன் கலந்து கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது மகள் புகைப்படங்களை வெளியிடும் போது மகளின் முகத்தை மறைத்து வந்த பிரியங்கா, நிகழ்ச்சியில் மகளின் முகத்தை மறைக்கவில்லை. அதனால், பிரியங்கா மகள் மல்டி மேரியின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
கடந்த வாரம்தான் மல்டி மேரியின் முதலாவது பிறந்த நாள் வந்தது. மகளுக்கு ஒரு வயது முடிந்த பின் அவரது முகத்தை வெளியில் காட்டியுள்ளார் பிரியங்கா.