புதுடில்லிபினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், 2016ல் மேற்கொண்ட திருத்தங்களில் சில பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்யக்கோரிய மத்திய அரசின் மனுவை, நேரடி விசாரணைக்கு ஏற்க பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், 2016ல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், இரண்டு பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
‘இந்த மறு ஆய்வு மனுவை, நீதிபதிகளின் அறையில் இல்லாமல், நீதிமன்ற அறையில் மற்ற வழக்குகளை போல நேரடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என, மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.
இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. பொதுவாக, துாக்கு தண்டனையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரும் மனுக்கள் மட்டுமே நேரடி விசாரணைக்கு எடுத்துக் கொள்வது வழக்கம்.
இதர மறு ஆய்வு மனுக்கள், நீதிபதிகளின் அறையிலேயே விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement