மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயை உடைத்து அனுமதியின்றி மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திய தனியார் திருமண மண்டப உரிமையாளரிடம் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அங்குள்ள பாரதிதாசன் வீதியில் 8 இன்ச் பிளாஸ்டிக் பைப் செல்லும் அளவிற்கு பள்ளம் தோண்டிய தனியார் திருமண மண்டப நிர்வாகத்தினர், புதிய மழைநீர் வடிகாலை சேதப்படுத்தி மண்டபத்தின் கழிவுநீரை வெளியேற்றினர்.
இதனையடுத்து, திறந்த 2 நாட்களில் அந்த மண்டபத்தை இழுத்து பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்த பின்னர் திறந்து விட்டனர்