புதுடில்லி, மத்திய சட்டத் துறை முன்னாள் அமைச்சர் சாந்தி பூஷண்,97, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல சட்ட நிபுணரும், மத்திய சட்டத் துறை முன்னாள் அமைச்சருமான சாந்தி பூஷண், உடல்நலக்குறைவால் புதுடில்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார்.
மூத்த வழக்கறிஞரான பூஷண், மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977 முதல் 1979 வரை சட்ட அமைச்சராக பதவி வகித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சட்டத் துறையில் சாந்தி பூஷண் ஆற்றிய பங்களிப்பும், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக அவரது உழைப்பும் நினைவுகூரத்தக்கது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்,”என, கூறியுள்ளார்.
மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement