வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், 97 வயது முதுமை காரணமாக இன்று காலமானார். உ.பி .மாநிலம் பிரகாயாராஜ் பகுதியைச் சேர்ந்தவர் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண். கடந்த (1977-1979) ஆண்டில் மத்தியில் பிரதமராக மொரார்ஜி தேசாய் ஆட்சியில் சட்டம், நீதித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியுள்ளார்.
வயது முதுமை காரணமாக வீட்டில் ஒய்வெடுத்து வந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை துவக்கி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் , மற்றும் ஏராளமான பொது நல வழக்குகளில் ஆஜராகி வெற்றி பெற்று உள்ளார். இவரது மகன் பிரசாந்த் பூஷண் என்பவரும் மூத்த வழக்கறிஞராக உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement