டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளது. உச்சநீதிமண்டத்தில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வலிவுறுத்தியுள்ளது.
கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.இது தொடர்பான வழக்கு விசாரணை , சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.