விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் உடல் கண்டெடுத்தனர். குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.