திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் மகன் கவியரசன் (22). விசிக கிளை பொறுப்பாளரான இவர், தண்டலை பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு, நேற்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அம்மையப்பன் செல்லும் சாலையில் வயல் பகுதியில் வந்த போது பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், கவியரசனை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் கவியரசன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.