2023ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%: சர்வதேச நிதியம் கணிப்பு| Indias economic growth to 6.1% in 2023: International Finance Project

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: 2023ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும். 2024ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.8 ஆக உயரும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

latest tamil news

இது குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்டுள்ள அறிக்கை: 2023ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும். 2024ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.8 ஆக உயரும். உலகப் பொருளாதாரத்தை பொறுத்த வரையில், 2022ல் கணிக்கப்பட்டுள்ள 3.4 சதவீதத்தில் இருந்து 2023ல் 2.9 சதவீதம் என்று குறைந்துள்ளது.

ஆனால் 2024ல் 3.1 சதவீதமாக அதிகரிக்கும். ஆசிய கண்டத்தில் 2023 மற்றும் 2024ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி முறையே 5.3%- 5.2% ஆக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

latest tamil news

2022ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 % ஆக இருந்த நிலையில், தற்போது 2023ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1 % ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சித் துறை இயக்குநர் கூறுகையில், கடந்த அக்., மாதம் வெளியிட்ட கணிப்பில் இருந்து இந்தியாவின் வளர்ச்சி கணிப்புகள் மாறவில்லை எனக் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.