2023.01.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)
01. பெல்மடுல்ல மாவட்டஃநீதிவான் நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான காணி கைக்கொள்ளல்
பெல்மடுல்ல நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றமாகவும் நீதிவான் நீதிமன்றமாகவும் செயற்பட்டு வருவதுடன், தற்போது 8,385 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இந்நீதிமன்றத்தில்; போதியளவு இடவசதிகளின்மையால் பொது மக்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற பணிக்குழாமினர் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதனால், தேவையான வசதிகளுடன் கூடிய புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதியொன்றை நிர்மாணிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள பெல்மடுல்லவத்த எனும் பெயரிலான காணியில் 03 ஏக்கர்கள் வரையான காணித் துண்டொன்றை ஒதுக்கிக்கொள்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த காணித்துண்டை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு கைக்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஆராய்ச்சி சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
ஐக்கிய அமெரிக்காவின் வொசிங்டன் நகரில் அமைந்துள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகமும் இணைந்து, பெனின் குடியரசு, பிலிப்பைன், டன்சானியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் ஒத்துழைப்படன் நிலைபெறுதகு வகையான போசாக்குமிக்க உணவு முறைகளுக்காக பழவகைகள் மற்றும் மரக்கறிகளின் பயன்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சியை நடாத்துவதற்காக சர்வதேச விவசாய ஆராய்ச்சி நிலைய அமைப்புடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பாக சமகால நிலைமைகள் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட ஆராய்ச்சி சேவைகள் சிலவற்றை நடாத்துவதற்காக சிட்னி பல்கலைக்கழகத்தால் தொழிநுட்பவியல் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 11,250 அவுஸ்திரேலிய டொலர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உப ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. பிம்ஸ்டெக் சமவாயம் மற்றும் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களுக்கான வங்காளவிரிகுடா நாடுகளின் அமைப்பு (BIMSTEC) தொழிநுட்பப் பரிமாற்ற வசதிகளைத் தாபித்தல் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கை
பிம்ஸ்டெக் சமவாயம் மற்றும் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களுக்கான வங்காளவிரிகுடா நாடுகளின் அமைப்பு (BIMSTEC) தொழிநுட்பப் பரிமாற்ற வசதிகளைத் தாபித்தல் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் 2022.03.30 அன்று இலங்கை அரசு கையொப்பமிட்டுள்ளது. மேற்படி கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கையை ஏற்று அங்கீகரிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திடீர் மின்சாரத் தடைகள் ஏற்படும் போதும், மின்சாரத் தேவைகள் அதிகரிக்கும் போதும் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக மின் சேமிப்புத் தொகுதியொன்றை நிறுவுதல்
கொரியா குடியரசு மற்றும் இலங்கை அரசுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டுள்ள மானியங்கள் உதவித்திட்டங்கள் தொடர்பாக சட்டகத்தின் கீழ் அம்பாந்தோட்டை மின் உப நிலையங்களுக்கு அண்மித்ததாக 05 மெகாவாற்று இயலளவைக் கொண்ட 08 மணித்தியாலய மெகாவாற்று வலுசக்தியை சேமித்து வைக்கக்கூடிய தொகுதியொன்றை நிறுவுவதற்காக 14.3 கொரிய வொன் பில்லியன்கள் (11.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக் குறிப்புக்களுக்கமைய குறித்த தரப்பினர்களுக்கிடையே கையொப்பமிடுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2023.01.01 ஆம் திகதிய 2312ஃ77 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின 01 ஆம் இலக்க விசேட இறக்குமதி அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள்
- 2023.01.01 ஆம் திகதிய 2312ஃ78 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்
06. விமானங்களில் பயணிக்கும் போது இடம்பெறுகின்ற குற்றங்கள் மற்றும் ஒருசில ஏனைய செயல்கள் தொடர்பான சமவாயத்தைத் திருத்தம் செய்வதற்கான பணிமுறை விதிக்கோவையை நடைமுறைக்குக் கொண்டுவரல் (Entry into force of Montreal Protocol) (மொன்ரியல் பணிமுறை ஒப்பந்தம் – 2014)
விமானங்களில் பயணிக்கும் போது இடம்பெறுகின்ற குற்றங்கள் மற்றும் சில ஏனைய செயல்கள் தொடர்பான சமவாயத்தைத் திருத்தம் செய்வதற்கான பணிமுறை விதிக்கோவையின் (மொன்ரியல் பணிமுறை ஒப்பந்தம் – 2014) திருத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும், குறித்த பணிமுறை விதிக்கோவையின் ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்புடைய வகையிலான சட்ட வகுப்புக்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. வழக்குப் பொருட்கள் முகாமைத்துவம் மற்றும் கையுதிர்த்தல் தொடர்பாக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தல்
வழக்குப் பொருட்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் கையுதிர்த்தல் தொடர்பாகக் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இன்மையால் துரிதமாகக் கையுதிர்க்கப்பட வேண்டிய ஒருசில பொருட்களை பேணி வைத்திருப்பதற்கு நேரிட்டுள்ளமையால், பொருளாதார ரீதியாகப் பாதிப்புக்கள் ஏற்படுவதுடன், அங்ஙனம் ஒருசில பொருட்கள் பயன்பாட்டுக்கு எடுக்க முடியாத நிலைமை தோன்றுவதால் பிரச்சினைகள் மேலெழுந்துள்ளன. அதனால், வழக்கு விசாரணை முடிவுறும் வரைக்கும் நீதிமன்றத்தின் காப்பிலுள்ள வழக்குப் பொருட்களைக் கையுதிர்ப்பதற்கு ஏற்புடைய சட்ட ஏற்பாடுகள் மற்றும் குறித்த நடவடிக்கை முறைகள் உள்ளடங்கிய புதிய கொள்கை மற்றும் சட்ட வரையறையைப் பரிந்தரைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்குப் பொருட்கள் முகாமைத்துவம் மற்றும் கையுதிர்த்தல் தொடர்பான சட்டத்தை வலுவாக்கம் செய்வதற்கும், அதற்காகப் புதிய சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. தேசிய விருது (2023) – ஸ்ரீலங்காபிமானய ‘இலங்கையின் பெருமை’ விருது தேசபந்து கரு ஜயசூரிய அவர்களுக்கு வழங்கல்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் மிகவும் சிறப்பான சேவைகளைப் புரிந்த இலங்கைப் பிரஜைகளுக்கும் இலங்கையரல்லாத நபர்களுக்கும் அவரது வாழ்நாளில் ஒருதடவை மாத்திரம் வழங்கப்படுகின்ற தேசிய விருது வழங்கல் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருவது மரபாகவுள்ளது. அதற்கமைய, ஸ்ரீலங்காபிமானய ‘இலங்கையின் பெருமை’ விருது எமது நாட்டில் வழங்கப்படுகின்ற உயர் தேசிய கௌரவ விருதாகும். தேசபந்து கரு ஜயசூரிய அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டுமுகமாக அவர்களுக்கு ஸ்ரீலங்காபிமானய ‘இலங்கையின் பெருமை’ விருதை 2023 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதியன்று வழங்கிக் கௌரவிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
09. 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்திற்கான திருத்தங்கள்
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வருடாந்த மொத்த விற்பனை வரவின் மீது கூட்டுமொத்தம் 120 மில்லியன் ரூபாய்களை விஞ்சிய போது வரி அறிவிடக்கூடிய ஆளெவருக்கும் 2.5மூ வீத சமூகப் பாதுகாப்பு அறவீடொன்று விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அறவீட்டிலிருந்து விடுவித்தல் பற்றி சட்டத்தின் முதலாம் பாகத்தில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட யோசனை மூலம் 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்திகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் உற்பத்தி வரிக்கு உள்ளாகின்ற மோட்டார் வாகனங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களின் பாவனைக்கான உபகரணங்கள் சமூகப் பாதுகாப்பு அறவீட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் சில தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.