Asaram Bapu News Updates: ஆசிரம பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு ஐபிசி பிரிவுகள் 376 (2) (சி), 377 கீழ் இயற்கைக்கு மாறான செக்ஸ் மற்றும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என நேற்று குஜராத் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், இன்று தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவர் 2013 முதல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம், 2013 ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை (ஜனவரி 30) தீர்ப்பளித்தது. தண்டனையின் அளவு குறித்த வாதங்களைக் கேட்டபின் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி.கே.சோனி இன்று, 2013-ம் ஆண்டு முன்னாள் பெண் சீடர் தாக்கல் செய்த பாலியல் பலாத்கார வழக்கில் 81 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
காந்திநகரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்களன்று, ஐபிசி பிரிவுகள் 376 (2)(சி), 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்), 342 (சிறைவைப்பு), 506 (2) (குற்றவியல் மிரட்டல்), 354 (பெண்ணை தாக்குதல்) , மற்றும் 357 (தவறான முறையில் கட்டுப்படுத்துவதற்கான தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆசாராம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேரை விடுதலை செய்தது.விடுவிக்கப்பட்டவர்களில் ஆசாராமின் மனைவியும் ஒருவர் ஆவார்.