தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. ஆர்யா, ஜெய், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அட்லீக்கு தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அதன் பிறகு தன் இரண்டாவது திரைப்படமே தளபதியின் படமாக அட்லீக்கு அமைந்தது. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படம் மெகாஹிட் வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் தளபதியின் ஆஸ்தான இயக்குனராக மாறினார் அட்லீ.
Thalapathy 67: ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிய லோகேஷ் கனகராஜ்..உண்மையை உடைத்த பிரபலம்..!
விஜய்யை வைத்து தெறி ,மெர்சல் ,பிகில் என மூன்று ஹிட் படங்களை கொடுத்தார் அட்லீ. இதையடுத்து தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் இந்தாண்டு திரையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அட்லீ மற்றும் ப்ரியா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பிரபலமான ப்ரியா ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ அறிவித்தார். இதையடுத்து அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.
அவ்விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்நிலையில் தற்போது அட்லீ மற்றும் ப்ரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளனர். இதையடுத்து இவர்களை ரசிகர்களும் திரைத்துறையை சார்ந்தவர்களும் வாழ்த்தி வருகின்றனர் ..