Union Budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023 -ஐ நாளை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டபேரவை தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலாக இது பார்க்கப்படுகிறது. அதனால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நயிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் உரை தொடங்கும் நேரம் மற்றும் அதனை எங்கு? எப்படி? நேரலையில் பார்ப்பது என இங்கே தெரிந்து கொள்வோம்.
பட்ஜெட் 2023: தேதி மற்றும் நேரம்
மத்திய பட்ஜெட் 2023 பிப்ரவரி 1, 2023 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11:00 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை எங்கே பார்க்கலாம்?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களில் பார்க்கலாம். யூடியூப்களில் நேரலையில் ஒளிபரப்பப்படும். இதுதவிர ஜீ குழும செய்தி தொலைக்காட்சிகளிலும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் உரை நேரலையாக ஒளிபரப்பாகும்.
மோடி அரசின் கடைசி பட்ஜெட்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதனால் இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவிலான மக்களை கவரும் வகையிலான திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக செல்லக்கூடிய திட்டங்கள் இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது.