சமூக வலைதளத்தில் இலியானா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பதறிவிட்டார்கள்.
இலியானாதெலுங்கு திரையுலகில் கொடி கெட்டிப் பறந்தவர் இலியானா. இஞ்சி இடுப்பழகி என பெயர் எடுத்த அவர் அப்பொழுதே பல கோடிகளில் சம்பளம் வாங்கி சக நடிகைகள் காண்டாகும்படி செய்தார். இந்நிலையில் தான் அவரை தேடி பாலிவுட் பட வாய்ப்பு வந்தது. பாலிவுட் பக்கம் சென்றவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் இலியானாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவமனைஇன்ஸ்டாகிராமில் படுஆக்டிவாக இருப்பவர் இலியானா. இந்நிலையில் தான் மருத்துவமனையில் திடீர் என்று அனுமதிக்கப்பட்டதாகக் கூறி இன்ஸ்டா ஸ்டோரீஸில் புகைப்படம் வெளியிட்டார் இலியானா. அவருக்கு மூன்று பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றியிருக்கிறார்கள். எதனால் இந்த சிகிச்சை என்பதை இலியானா தெரிவிக்கவில்லை. ஆனால் தான் தற்போது நலமாக இருப்பதாக மட்டும் கூறியுள்ளார்.
நன்றிஇலியானாவின் உடல்நிலை குறித்து அறிந்த பலரும் அவருக்கு மெசேஜ் செய்திருக்கிறார்கள். அதற்கு இலியானா கூறியதாவது, என் உடல்நலம் பற்றி மெசேஜ் செய்யும் அனைவருக்கும் ரொம்ப நன்றி. உங்களின் அன்பை மதிக்கிறேன். தற்போது நான் நன்றாக இருக்கிறேன் என்பதை உறுதி செய்கிறேன். சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றேன் என்றார்.
என்னாச்சு?இலியானாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி திடீர் சிகிச்சை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உடம்புக்கு என்னவென்று சொல்லுங்கள் இலியானா. பத்திரம், பார்த்து இருங்க என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கெரியரை பொறுத்தவரை ரந்தீப் ஹூடா ஜோடியாக அன்ஃபேர் அன்ட் லவ்லி படத்தில் நடிக்கிறார் இலியானா என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டோலிவுட்டை போன்று இலியானாவால் பாலிவுட்டில் ஜொலிக்க முடியவில்லை. அழகும், நல்ல நடிப்புத் திறமையும் இருந்தும் போராடிக் கொண்டிருக்கிறார். நமக்கு ஒரு நாள் வரும் என்கிற நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். இதற்கிடையே பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரரும், இலியானாவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
ரசிகர்கள்திரையுலக பிரபலங்கள் சத்தாக சாப்பிடுகிறார்கள், ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கிறார்கள், யோகா, தியானம் செய்கிறார்கள். உடல்நல விஷயத்தில் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்கள். இந்நிலையில் திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இந்த நோய் இருக்கிறது, அந்த நோய் இருக்கிறது என்று தெரிவிப்பதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. அவர்களுக்கே இப்படியா என வியக்கத் தோன்றுகிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.