அடுத்தடுத்து விழுந்த அடியால் நடிகை நயன்தாரா தனது முடிவை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூப்பர் ஹிட் கமர்ஷியல் படம் கொடுத்த பிரபல இயக்குநருடனும் கை கோர்த்துள்ளாராம் நயன்தாரா.
ஹீரோக்களுக்கு நிகராகதென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி இந்தியிலும் அடியெடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாரா, ஹீரோக்களுக்கு நிகராக ரசிகர்களை கொண்டுள்ளார். Pooja Hegde: அண்ணன் திருமணத்தில் பட்டு சேலையில் அழகு பதுமையாக வலம் வந்த பூஜா ஹெக்டே…
லேடி சூப்பர் ஸ்டார்நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்ற அழைத்து வரும் ரசிகர்கள் அவரது திரைப்படம் என்றால் கொண்டாடி வருகின்றனர். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். Hansika Motwani: அம்மா வீட்டுக்கு வந்த ஃபீலிங்… சென்னையில் உணர்ச்சிவசப்பட்ட ஹன்சிகா மோத்வானி!
பின்னடைவு…கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நடிகை நயன்தாரா, திருமணத்திற்கு பிறகு ஹீரோயின் சப்ஜெக்ட்டுகளிலேயே நடிக்க விரும்புவதாக தகவல் வெளியானது. ஆனால் நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படங்கள் எதுவும் அண்மைக் காலமாக கைக்கொடுக்கவில்லை. நெற்றிக்கண், ஓ2, கனெக்ட், கொலையுதிர் காலம் போன்ற சில பாடங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பின்னடவை சந்தித்தன.
Pooja Hegde: கல்யாண போட்டோக்களை ஷேர் செய்த பீஸ்ட் ஹீரோயின்… பதறிப்போன ரசிகர்கள்!
ஓகே சொன்ன நயன்தாராஇதனால் நடிகை நயன்தாரா தனது முடிவை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இனிமேல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ள உள்ளாராம் நயன்தாரா. மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க திட்டுமிட்டுள்ள நயன்தாரா, ஏற்கனவே இணைந்து ஹிட் படங்களை கொடுத்த ஹீரோக்களுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஓகே சொல்லி வருகிறாராம்.
Dancer Ramesh Death: என்னது.. அவர நான் கொன்னுட்டேனா.. அன்னைக்கு நடந்தது இதுதான்.. இன்பவள்ளி பரபர!
மித்ரன் ஜவஹர்..இதனால் நயன்தாராவை மீண்டும் ஹீரோக்களுடன் டூயட்டில் காணலாம் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள். நயன்தாரா தற்போது தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் அந்தப் படமும் பக்கா கமர்ஷியல்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிக்கு வொர்கவுட் ஆகல … நயன்தாராவுக்கு ஆகுது!
யாரடி நீ மோகினிஏற்கனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகை நயன்தாரா தனுஷூக்கு ஜோடியாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்துள்ளார என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த 4 மாதங்களில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆயினர். அந்த விவகாரம் சர்ச்சையான போதும் அதனை இருவரும் சாமர்த்தியமாக சமாளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dancer Ramesh Death: முதுகு பிளந்திருந்தது… உடல் மோசமாக கிடந்தது… டான்ஸர் ரமேஷின் தாய் திடுக்!
Nayanthara