அண்மையில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் நடிப்ப்பில் வெளியான ‘பதான்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. சமீப காலமாக பாலிவுட் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்த நிலையில் ‘பதான்’ பட வெற்றி பாலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசூலிலும் மிகப்பெரிய சாதனை படித்து வருகிறது.
மேலும் இணையத்தில் பேன் ஹேஸ்டாக் டிரெண்ட் செய்யும் கோஸ்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘பதான்’ இமாலய சாதனை படைத்து வருவதாக ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், தீபிகா படுகோனே, ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட பலர் ‘பதான்’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘பதான்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நான்கு வருட காத்திருப்புக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஷாருக்கான் இந்தப்படத்தில் ரா ஏஜெண்டாக நடித்துள்ளார். மேலும் சல்மான் கான் இந்தப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி நாடு முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘பதான்’ படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. மேலும், 5 நாட்களில் ‘பதான்’ படம் 543 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 335 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 208 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Thalapathy 67: இனிமே பட்டாசு தான்: சரவெடியாய் வெளியான ‘தளபதி 67’ அப்டேட்.!
இந்நிலையில் மும்பையில் ‘பதான்’ படத்தின் வெற்றிவிழா நடந்தது. இதில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ஷாருக்கான், “நாங்கள் படம் எடுப்பது அன்பையும் கருணையையும் பரப்புவதற்கே தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. கடந்த இரண்டு வருடங்களாக நான் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. எனது முந்தைய படங்களின் தோல்வியால் வேறு தொழிலுக்கு செல்லலாமா என்று கூட யோசித்தேன்.
Thalapathy 67: ‘தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை: பான் இந்தியா நடிகர் முடிவால் ரசிகர்கள் ஷாக்.!
உண்மையை சொல்லப்போனால் ரெஸ்டாரண்ட் தொடங்கும் என்னத்தோடு சமையல் கூட கற்றுக்கொண்டேன்”. ஆனால், பதான் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. தோல்வியடைந்த நேரத்திலும் என்னை நேசிக்க லட்சக்கணக்கானோர் இருந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என உருக்கமாக பேசியுள்ளார். ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.