விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. விக்ரம் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் தளபதி 67 என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
எனவே தளபதி 67 படத்தில் நாம் வழக்கத்திற்கு மாறான விஜய்யை பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் தளபதி 67 படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
Thalapathy 67: ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிய லோகேஷ் கனகராஜ்..உண்மையை உடைத்த பிரபலம்..!
இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. லோகேஷ் மல்டி ஸ்டாரர் படங்களை எடுப்பதில் வல்லவர் என்பதால் இப்படமும் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இப்படம் துவங்கும் முன்பே பல கோடிக்கு வியாபாரமாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்டை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்க இருக்கின்றார் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்.
கடந்தாண்டு வெளியான KGF 2 படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து மிரட்டிய சஞ்சய் தத் தளபதி 67 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதையடுத்து தளபதி 67 படத்தின் ஒன் லைனை கேட்டு இப்படத்தில் நடிக்க ஆர்வம் கட்டியதாக சஞ்சய் தத் கூறியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஒன் லைன் இதுவாகத்தான் இருக்கும் என பெரும்பாலான ரசிகர்கள் கணித்து வருகின்றனர். அதன் படி படத்தில் விஜய், சாதாரண மனிதராக இருந்து சில சூழ்நிலைகளால் எவ்வாறு அசாதாரண மனிதராக மாறுகிறார் என்பது தான் படத்தின் ஒரு வரி கதையாக இருக்கும் என சிலர் கணித்து வருகின்றனர். இந்த ஒரு வரி கதையை லோகேஷ் தன் ஸ்டைலில் உருவாகியிருந்தால் படம் வேற லெவலில் இருக்கும் எனவும் பேசி வருகின்றனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.