லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியான உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
மல்டி ஸ்டாரர் படமாக வெளியான விக்ரம் திரைப்படம் எதிர்பார்ப்பையும் மீறி வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படத்தில் லோகேஷ் பயன்படுத்திய LCU ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.
AK 62: உதயநிதியின் உதவியால் AK62 வாய்ப்பை தட்டி தூக்கிய இயக்குனர்..கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!
இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்ந்திருந்தார் லோகேஷ். ஆனால் இம்முறை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் தளபதி 67 படத்தை உருவாக்கி வருகின்றார். இப்படத்தின் பூஜை கடந்த மாதம் போடப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, மிஸ்கின், கௌதம் மேனன், அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும் இப்படம் LCU வில் இணையும் பட்சத்தில் கார்த்தி, சூர்யா, கமல் போன்ற நடிகர்கள் நடிக்கும் வாய்ப்பும் இருக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையடுத்து தற்போது வந்த தகவல் ஒன்று ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. அதாவது கைதி படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது தனியாக உருவாகும் யூனிவெர்ஸ் என குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார் எஸ்.ஆர்.பிரபு. இதன் மூலம் தளபதி 67 திரைப்படம் LCU வில் இணையாமல் தனி படமாக உருவாகி வருவதை எண்ணி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.