Thalapathy 67: விஜய்க்கு இருக்கிற பிரச்சனை போதாதுனு இவர் வேறயா, வெளங்கிடும்

Thalapathy, Vijay: தளபதி 67ல் விஜய்யுடன் மோதப் போகும் நபர்கள் பட்டியலில் புதிதாக ஒருவரை சேர்த்திருக்கிறாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

தளபதி 67Thalapathy 67: போச்சு, தளபதி விஜய் சோலி முடிஞ்சுச்சுமாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் தளபதி 67. அந்த படத்தில் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்களாம். இது போதாது என்று விஜய்க்கு முக்கிய வில்லனாக நடிக்குமாறு சீயான் விக்ரமிடம் வேறு கேட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சீயான் பெயரை கேட்டதுமே ரசிகர்களுக்கு லைட்டா பயம் வந்துவிட்டது.

சிம்புவில்லன் கூட்டம் பயங்கர ஸ்ட்ராங்காக இருக்கிறதே, தளபதியை வைத்து லோகேஷ் கனகராஜ் காமெடி கீமெடி எதுவும் செய்யவில்லையே என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக அவரின் ரசிகரான சிலம்பரசன் நடிக்கப் போகிறார் என்று புது தகவல் வெளியாகி தளபதி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தளபதி 67 படத்தின் ப்ரொமோ வீடியோ பிப்ரவரி மாதம் 3ம் தேதி வெளியாகுமாம்.
சிம்பு பிறந்தநாள்பிப்ரவரி 3ம் தேதி சிலம்பரசனின் பிறந்தநாளாகும். இதனால் தளபதி 67 படத்தில் சிம்பு நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள். லோகேஷின் படங்களில் வில்லன்கள் பயங்கர கெத்தாக வந்து ரசிகர்களை கவர்ந்துவிடுவார்கள். அதனால் தான் தளபதி 67 படத்தில் புதுப் புது வில்லன்கள் வந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பயத்தை அளித்திருக்கிறது.

தீ தளபதிநான் விஜய்ணா ரசிகன் என சொல்லி வரும் சிம்பு வாரிசு படத்தில் தீ தளபதி பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு வில்லனாகி பெரிய அளவில் சம்பவம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. அது அவரால் முடியும் என்பது தான் பிரச்சனையே. விஜய்க்கு ஏற்கனவே இருக்கும் வில்லன்கள் பிரச்சனை போதாதா, இதில் சிம்வு வேறயா?. உங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை லோகேஷ் என்கிறார்கள் ரசிகர்கள்.
அப்டேட்தளபதி 67 பட அப்டேட் கேட்டு வந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் தளபதி 67 அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளனர். நேற்று மாலை வந்த அப்டேட்டை பார்த்து ரசிகர்கள் லைட்டா கடுப்பாகிவிட்டார்கள். இதுக்கு பெயர் தான் அப்டேட்டா, நாளையாவது தரமான அப்டேட் கொடுங்க இயக்குநரே என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறிவிப்பு
டான்ஸ்டான்ஸ் ஆடுவதில் வல்லவர் விஜய். அவர் டான்ஸ் ஆடினால் செட்டில் இருப்பவர்கள் எல்லாம் வியந்து பார்ப்பார்கள். ஆனால் அவருக்கு ஜானி மாஸ்டர் ஸ்டெப்ஸ் போட்டால் மட்டும் காமெடியாகிவிடுகிறது. இந்நிலையில் தளபதி 67 படத்தில் ஜானி மாஸ்டர் இல்லை என்கிற தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.