Upcoming Tamil movies in OTT, Theatres: பிப்ரவரியில் கலக்க வரும் தமிழ் படங்கள், பட்டியல் இதோ

2023 ஆம் புத்தாண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அமோகமாக பிறந்தது. பொங்கல் ரிலீசாக வெளிவந்த விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியதோடு, ரசிகர்களையும் மகிழ்வித்தன. இரண்டு படங்களுமே பொங்கல் வெற்றிப்படங்களாக திகழ்ந்து பாக்ஸ் ஆபிஸில் தங்கள் பெயரை நிலை நாட்டின. இதை அடுத்து இந்த ஆண்டு இன்னும் பல படங்கள் மற்றும் ஓடிடி ரிலீஸ்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் பிப்ரவரி மாதம் தியேட்டர்கள் மற்றும் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள தமிழ் படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்தப் பட்டியலில் ஒரு வாரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதால், இந்த மாதமும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேல், தலைகூத்தல், வாத்தி, ரன் பேபி ரன், சாகுந்தலம், பார்டர் மற்றும் பல சுவாரஸ்யமான படங்கள் பிப்ரவரி 2023 இல் வெளியாகவுள்ளன.

பிப்ரவரி 2023 முதல் வார வெளியீடாக தியேட்டரில் வரவுள்ள தமிழ் திரைப்படங்கள்:

– மைக்கேல் (பிப்ரவரி 3)
– ரன் பேபி ரன் (பிப்ரவரி 3)
– குற்ற பின்னனி (பிப்ரவரி 3)
– பொம்மை நாயகி (பிப்ரவரி 3)
– தி கிரேட் இந்தியன் கிச்சன் (பிப்ரவரி 3) 
-நான் கடவுள் இல்லை (பிப்ரவரி). 3)

OTT ரிலீஸ்:
– பிளாக் பேந்தர்: வகண்டா ஃபாரெவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகும்.
– கோவை சரளா நடித்த செம்பி திரைப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும்.

பிப்ரவரி 2023 இரண்டாம் வார வெளியீடாக தியேட்டரில் வரவுள்ள தமிழ் திரைப்படங்கள்:

– தாதா (பிப்ரவரி 10)
– காசேதன் கடவுளடா (பிப்ரவரி 10) 
– வசந்த முல்லை (பிப்ரவரி 10).

OTT ரிலீஸ்:
துணிவு மற்றும் வரிசு ஆகிய படங்களின் ஓடிடி வெளியீடு பிப்ரவரி 10 ஆம் தேதி என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. துணிவு மற்றும் வரிசு ஆகிய படங்கள் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

– ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபர்ஸி வெப் சீரிஸ் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

பிப்ரவரி 2023 மூன்றாம் வார வெளியீடாக தியேட்டரில் வரவுள்ள தமிழ் திரைப்படங்கள்:

– பகாசுரன் (பிப்ரவரி 17)
– வாத்தி (பிப்ரவரி 17)
– சாகுந்தலம் 3டி (பிப்ரவரி 17) 
– ஆன்ட்-மேன் அண்ட் தி வாஸ்ப்: குவான்டுமேனியா (பிப்ரவரி 17) 
– அருண் விஜய் நடித்துள்ள பார்டர் (பிப்ரவரி 24) 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.