விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண வீடியோ வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
காதல் திருமணம்தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, ஆரம்பத்தில் கிடைத்த கதாப்பாத்திரங்களில் எல்லாம் நடித்து வந்தார். தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். Dancer Ramesh Death: தாங்க முடியலம்மா… உருட்டுக்கட்டையால் அடித்த இன்பவள்ளி.. கதறும் டான்ஸர் ரமேஷ்.. ஷாக்கிங் வீடியோ!
7 ஆண்டு காதல்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பிறகு 7 ஆண்டுகள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விக்கியும் நயனும் கடந்த ஜூன் மாதம் விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர ஷாருக்கான், ஏஆர் ரஹ்மான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்துதான் தாலி எடுத்து கொடுத்தார். Valaxmi Sarathkumar: குடும்பத்துடன் பிகினியில் ஆட்டம் போட்ட வரு… தீயாய் பரவும் வீடியோ!
ரூ. 25 கோடிநயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் திருமண ஸ்ட்ரீமிங் உரிமையை பிரபல ஒடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. திருமணத்தில் கூட நயன்தாரா கல்லா கட்டிவிட்டார் என பலரும் விமர்சித்து வந்தனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஸ்பெயினில் ஹனிமூன் கொண்டாடியது கூட நெட்ஃபிளிக்ஸின் செலவில்தான்.
Nayanthara: அடுத்தடுத்து விழுந்த அடி… நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!
ஹனிமூன் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோவில் அவர்களின் ஹனிமூனும் இடம்பெறும் என கூறப்பட்டது. இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டனர். ஆனால் திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆன நிலையில் இன்னமும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் வீடியோ ஒளிபரப்பப்படவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண வீடியோ தாமதமாவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. Hansika Motwani: அம்மா வீட்டுக்கு வந்த ஃபீலிங்… சென்னையில் உணர்ச்சிவசப்பட்ட ஹன்சிகா மோத்வானி!
படப்பிடிப்பை முடிக்காத விக்கிஅதாவது இந்த திருமண வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் டாக்குமெண்ட்ரியாக உருவாக்குகிறாராம். இதற்காக சில எக்ஸ்க்குளூசிவ் படப்பிடிப்பிலும் ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் படப்பிடிப்பு கடந்த 23 ஆம் தேதிதான் நிறைவடைந்ததாம். ஷூட்டிங் முடிக்கப்படாத காரணத்தினால்தான் நெட்ஃபிளிக்ஸில் விக்கி நயன் திருமண வீடியோ வெளியாக தாமதமானதாக கூறப்படுகிறது. விக்கிக்கு வொர்கவுட் ஆகல … நயன்தாராவுக்கு ஆகுது!
ஏகே 62லிருந்து நீக்கம்மேலும் இதற்கான போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளும் இன்னும் தொடங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் நயன்தாரா வீடியோ நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இன்னும் கூட தாமதமாகலாம் என கூறப்படுகிறது. அஜித்தின் 62 படமான ஏகே 62 படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் திடீரென அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. Dancer Ramesh Death: முதுகு பிளந்திருந்தது… உடல் மோசமாக கிடந்தது… டான்ஸர் ரமேஷின் தாய் திடுக்!
Vignesh Shivan