பிரித்தானிய பாராளுமன்றத்தில் திடீரென கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் குழப்பம்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் திடீரென நுழைந்து கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற மேல் சபையில் காலநிலை ஆர்வலர்கள் பயன்படுத்தும் கொரில்லா உத்திகளை ஒடுக்குவதற்கு புதிய எதிர்ப்பு சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரித்தானிய பாராளுமன்ற மேல் சபையில் மசோதா வாசிக்கப்படும் போது சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவொன்று திடீரென கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதன்போது, Extinction Rebellion என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவின் 12 உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் ”மனித உரிமைகளைப் பாதுகாப்போம்” என்ற … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விருப்பம்; புது டிவிஸ்ட்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்காக திமுக மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வார்டு வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை அந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து … Read more

ஸ்பெயின் தீவுப்பகுதிகளில் சிக்கித் தவித்த 171 அகதிகள் பத்திரமாக மீட்பு..!

ஸ்பெயினின் தீவுப்பகுதிகளில் 3 படகுகளில் சிக்கித் தவித்த 171 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கேனரி தீவிற்கு ஒரு படகில் வந்த 55 பேரையும், ஃபூர்டெவென்ச்சுரா (Fuerteventura) தீவில் 2 படகுகளில் வந்த 116 பேரையும் ஸ்பெயின் கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர். கடும் குளிரில் சிக்கியவர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினர் மருத்துவ உதவி அளித்து தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர். வடஅமெரிக்க நாடுகளிலிருந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு அகதிகள் வருவதாகவும், ஜனவரி மாதத்தில் மட்டும் கனேரி தீவிற்கு 371 … Read more

பல முறை கெஞ்சிய தாயார்… திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம்

பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 8 வயது சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் இரண்டு முறை மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பியதாக  தாயார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கண்டுகொள்ளாத மருத்துவமனை குறித்த தாயார் பல முறை கெஞ்சியும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், ஜனவரி 6ம் திகதி சிறுவன் பரிதாபமாக மரணமடைந்துள்ளான். கடந்த டிசம்பர் 10ம் திகதி இருமல் மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக 8 வயதான சிறுவன் முகமது இசான் டேனிஷ் பிராட்ஃபோர்ட் ராயல் மருத்துவமனைக்கு … Read more

என்றும் வாழ்கிறார்! அண்ணா, இன்றும் ஆள்கிறார்! திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை: என்றும் வாழ்கிறார்! அண்ணா, இன்றும் ஆள்கிறார்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் அண்ணா புகழ் வணக்க மடல்!  என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் அண்ணா புகழ் வணக்க மடல்! தென்னாட்டுக் காந்தி, இந்நாட்டு இங்கர்சால், … Read more

ஈரோடு இடைத்தேர்தல்; முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் … Read more

மரக்காணத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது

விழுப்புரம்: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மரக்காணத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மரக்காணத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் திரைக்காற்றும் பலமாக வீசி வருகின்றது.

இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக உயரும்: ஐ.எம்.எஃப் தகவல்

புதுடெல்லி: உலகளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில்கொண்டு  வரும் 2023ல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என ஐநா  தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில்  ஐநா வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம்  (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஏற்கனவே கடந்த 2022ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக கணிக்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியானது … Read more

`நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி எங்க நிலத்தை வாங்க வேண்டும்”- கடலூர் விவசாயிகள்

“என்.எல்.சி க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி, கடலூரில் 7 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து `குறை தீர்க்கும் கூட்டத்தில்’ மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூரில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. கடலூரில் கடந்த 1957 ம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் இருந்து கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். … Read more

மறு ஆய்வு மனு விசாரணை : மத்திய அரசின் கோரிக்கை ஏற்பு| Re-examination Petition Hearing: Acceptance of Central Governments request

புதுடில்லி :பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், 2016ல் மேற்கொண்ட திருத்தங்களில் சில பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்யக்கோரிய மத்திய அரசின் மனுவை, நேரடி விசாரணைக்கு ஏற்க பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், 2016ல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், இரண்டு பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more