தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் மும்முரம்!

தூத்துக்குடி:  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை  மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால், அதை விற்பனை செய்வதாக அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. தூத்துக்கு பகுதி மக்களின் வாழ்வாதாரமாக ஸ்டெர்லைட் ஆலை இருந்து வந்தாலும், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் புகை போன்றவற்றால் அந்த பகுதி மக்கள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டனர். பலருக்கு புற்றுநோய் உள்பட பல நோய்கள் பரவியது. இதையடுத்து, ஆலையை மூட வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளாக தாமிர உற்பத்தி செய்து வந்த … Read more

இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை அகதி ஹரினா இந்தியாவில் பிறந்து படிப்பை முடித்து வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. அகதி ஹரினாவின் விண்ணப்பத்தை ஒன்றிய உள்துறை செயலாளர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

காரைக்குடி மஞ்சுவிரட்டில் 12 பேர் காயம்

காரைக்குடி: காரைக்குடி அருகே தேவப்பட்டு மஞ்சுவிரட்டில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்

தோல்பூர்: ராஜஸ்தானில் அடுக்குமாடி சுவர் இடிவதற்கு முன் வீட்டில் இருந்த எலி ஒன்று உருட்டியதால், தூங்கிக் கொண்டிருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் சிக்ரவுடா கிராமத்தைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் குடும்பத்தினர் வழக்கம் போல் இரவில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டில் இருந்த எலி ஒன்று நள்ளிரவில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. எலியின் உருட்டல் சத்தம் கேட்டு மொத்த குடும்பமும் விழித்துக் கொண்டது. அப்போது வீட்டின் சுவரின் ஒருபகுதியில் … Read more

மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண் காலமானார்| Senior advocate Shanti Bhushan passes away

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், 97 வயது முதுமை காரணமாக இன்று காலமானார். உ.பி .மாநிலம் பிரகாயாராஜ் பகுதியைச் சேர்ந்தவர் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண். கடந்த (1977-1979) ஆண்டில் மத்தியில் பிரதமராக மொரார்ஜி தேசாய் ஆட்சியில் சட்டம், நீதித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியுள்ளார். வயது முதுமை காரணமாக வீட்டில் ஒய்வெடுத்து வந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அலகாபாத் … Read more

ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னி வெர்ஷிங். இவர் புரூஸ் அல்மைட்டி, பிலோ த பெல்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். போஷ், டைம்லெஸ் உள்பட 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். 2009ம் ஆண்டு ஒளிபரப்பான 24 என்ற தொடரில் ரெஸி வாக்கர் என்ற கேரக்டரில் நடித்து உலக புகழ் பெற்றார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். 45 வயதான அன்னி வெர்ஷிங் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். … Read more

கோபத்தை விட அவனுக்கு இயல்பான இன்னொரு முகம் இருக்கு : அசீம் குறித்து மைனா நந்தினி

கோபத்தை விட அவனுக்கு இயல்பான இன்னொரு முகம் இருக்கு : அசீம் குறித்து மைனா நந்தினி Source link

கடலூர் அருகே குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் மனித சடலம்! 

கடலூர் : ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து, இன்று ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.   அழகிய நிலையில் இந்த ஆண் சடலம் மீட்கப்பட்டதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில்\ ஆழ்ந்துள்ளனர். மீட்கப்பட்ட அந்த ஆண் சடலம் அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த … Read more

மெரினாவில் பேனா நினைவு சின்னம் வச்சு பாருங்க.. ஒரு நாள்ல உடைச்சு காட்டுறேன்- சீமான் ஆவேசம்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது. … Read more

ஓசூர்: 20 டன் ரேஷன் அரிசி கடத்தியபோது மாரடைப்பால் டிரைவர் பலி! – போலீஸார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு லாரி பல மணி நேரமாக நிற்பதாகவும், லாரியை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் இன்று, அட்கோ போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், டிரைவர் சடலத்தை மீட்டு விசாரித்ததில், லாரியை ஓட்டி வந்தது சென்னை, அருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (50) என்பது தெரியவந்தது. லாரியை போலீஸ் ஸ்டேஷன் எடுத்து சென்று சோதனை செய்ததில், சாக்குப்பைகளில் நிறைய மூட்டைகள் … Read more