சென்னையில் தவறான பாதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 2,546 வழக்குகள்; ரூ.3.81 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் நேற்று (ஜன.30) ஒரு நாளில் மட்டும் தவறான பாதையில் வாகனம் ஒட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 763 வழக்குகளுக்கு அபராத தொகை ரூ.3,81,500 வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள தகவல்: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் – ஐகோர்ட் இடைக்கால தடை!

டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டுமென வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2021 – 22 ஆம் நிதியாண்டிற்கு 7 ஆயிரத்து 986 கோடியே 34 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 26 தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீசை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை … Read more

‘என்னை பிரதமராக்கினாலும் பாஜகவில் சேரமாட்டேன்’ – சித்தராமையா உறுதி.!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%), காங்கிரஸ் 80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு … Read more

Rajinikanth: ஆசைஆசையாய் வந்த ரசிகர்: எச்சரித்த நடிகர் ரஜினிகாந்த்.!

சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’ படத்தினை ரஜினி தற்போது ஜெயிலரில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற டார்க் காமெடி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நெல்சன் திலீப்குமாருடன் முதன்முறையாக ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ‘ஜெயிலர்’ பட வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து … Read more

கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,500 பக்தர்கள் வருகை

கச்சத்தீவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்து கொள்வதற்கு இந்தியாவிலிருந்து சுமார் 60 படகுகளில் 2,500 பேர் வரவுள்ளதாக வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தகவல் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் இந்தியா, இலங்கையில் இருந்து சுமார் 8,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத்தந்தை அனுப்பிய கடிதத்துடன், வேர்கோடு பங்குத்தந்தை தலைமையில், விழா ஒருங்கிணைப்பு குழுவினர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் … Read more

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிப்பு

ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபின், ஆந்திராவிற்கு அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் என 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, மார்ச் 3, 4ஆம் தேதிகளில் அங்கு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார். … Read more

#Thalapathy67Update : இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், தாமஸ் மாத்யூ…. விஜயுடன் கைகோர்க்கும் நடிகர் பட்டாளம்

விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இன்று வெளியிட்டு வருகிறது. ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தவிர இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் இளம் நடிகர் தாமஸ் மாத்யூ என்று பலரும் இதில் நடிக்கிறார்கள். Yes, it’s official now!We are happy to announce Director #Mysskin sir is part of #Thalapathy67 🔥#Thalapathy67Cast #Thalapathy @actorvijay … Read more

களஆய்வில் முதலமைச்சர் திட்டம் துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்: வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை

வேலூர்: களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் செல்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘களஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை வேலூரில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் 12.20 மணியளவில் காட்பாடி வருகிறார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர், அங்கு மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கான கட்டிடங்களுக்கு … Read more

அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.கோவை தொண்டாமுத்தூரில் சில ஆண்டுக்கு முன் நடந்த லே-அவுட் அனுமதி தொடர்பான புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.     

அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு

மும்பை: மும்பை வந்த விமானத்தில் போதையில் இருந்த இத்தாலி பெண் பயணி ஒருவர், விமான ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் (யுகே 256), 45 வயதான இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் பயணி பயோலா பெருசியோ என்பவர் போதையில் பயணித்தார். அவர் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர முயற்சித்தார். அவரை … Read more