விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த வழக்கு… சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமீன்!

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சங்கர் மிஸ்ராவுக்கு இன்று, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணியின் இருக்கையில் சங்கர் மிஸ்ரா என்ற பயணி சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ரா, பெங்களூருவில் டெல்லி … Read more

நடுவானில் விமான கழிவறையில் சிகரெட் பிடித்தவர் கைது| Man arrested for smoking cigarette in flight toilet in mid-air

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி: நடுவானில் விமான கழிவறைக்குள் சிகரெட் பிடித்ததாக கேரளாவைச் சேர்ந்த 62 வயது நபர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் கூறியது, தனியார் விமானம் கடந்த ஜன.29-ம் தேதி கொச்சியிலிருந்து வழக்கமாக புறப்பட்டுச் சென்றது. அப்போது நடுவானில் விமான கழிவறையில் 62 வயது நபர் சிகரெட் பிடித்ததாக விமான பணியாளர்கள் புகார் கூறினர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அந்த நபர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுகுமாறன் … Read more

வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி

1979ம் ஆண்டு வெளிவந்த குடிசை படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஜெயபாரதி. முதன் முறையாக சென்னை சேரிப்பகுதியில் வாழும் மக்களை பற்றி வெளிவந்த படம் இது. இதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்த கமலா காமேஷ் கதை நாயகியாக நடித்தார். பல விருதுகளை பெற்ற படம் இது. அதன்பிறகு ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் ஐந்து, உச்சிவெயில், நண்பா நண்பா, குருஷேத்திரம் உள்பட பல படங்களை இயக்கினார். கடைசியாக 2010ம் ஆண்டு புத்திரன் என்ற படத்தை … Read more

ஆசை வார்த்தை கூறி 14 சிறுமியை சீரழித்த இளைஞர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை.!

ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை சீரழித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிராஜ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் சசிராஜுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு சசி ராஜ் ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் … Read more

அரை நிர்வாணமாக பெண் ரகளை..!!

இத்தாலியை சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்பவர் அபுதாபியில் இருந்து மும்பைக்கு செல்லும் விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான யுகே 256 விமானத்தில் எகானமி பிரிவில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். தொடர்ந்து விமானம் புறப்பட்டவுடன் அவர், தனக்கு பிசினஸ் வகுப்பில் இருக்கை தரவேண்டும் என கூறி விமான பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அதற்கு அவர்கள் மறுத்தபோது, மதுபோதையில் இருந்த பாவ்லோ விமான பணியாளர்களை தாக்கியதாகவும் தெரிகிறது. அதன் பிறகு தனது ஆடைகளை கழற்றிவிட்டு அரைநிர்வாணமாக அவர் … Read more

இனி ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் ..!!

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்பு தெலங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக உருவானது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக அமராவதி நகரத்தை அப்போதையை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.அதன்பின்பு அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் கர்னூலை சட்ட தலைநகராகவும் ஏற்படுத்தப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தை தலைநகராக அம்மாநில முதல்வர் … Read more

தேனி: அரசுப் பள்ளியில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தனரா?- அதிர்ச்சி வீடியோவும், பள்ளி விளக்கமும்

​தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி​அமைந்திருக்கிறது​. 6​ ​முதல் 10-ம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த நிலையில், பள்ளியில் ​படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், கழிவறையை​யும் சுத்தம் செய்​வது போன்ற​வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் கையில் பக்கெட்டுடன் கழிப்பறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதும், ​சில மாணவர்கள் ​பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகளை சுத்தம் செய்வதும், சுவர்களில் … Read more

ஊராட்சி வரவு-செலவு கணக்கு கேட்டவருக்கு நேரில் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்..!

அண்ணனிடம் மோதினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்ட நபருக்கு விருநகர் மாவட்டம் கோபாலபுரம் ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியானது. ராஜபாளையம் அருகிலுள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான குருசாமி, கோபாலபுரம் ஊராட்சியின் வரவு-செலவு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஊராட்சிமன்றத் தலைவி சுதாவின் கணவர் ஜெயக்குமார், குருசாமி நடத்தி வரும் ஜெராக்ஸ் கடைக்கேச் சென்று … Read more

தி.மலையில் தோண்டிய பள்ளத்தில் கால்வாய் பணியை தொடங்காததைக் கண்டித்து வணிகர்கள் மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் பணியைத் தொடங்காமல் உள்ள நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து வணிகர்கள், பொதுமக்கள் இன்று (31-ம் தேதி) சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை சார்பில் திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலை பேருந்து நிறுத்ததில் இருந்து ரயில்வே கேட் (விழுப்புரம் – திருவண்ணாமலை சாலை) வரை, சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 4 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதையொட்டி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாக கூறி 40-க்கும் … Read more

2016 சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா – மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு

2016 சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக சேகர் ரெட்டியின் நிறுவனத்திடம் 7 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறி வருமான வரித் துறையின் நடவடிக்கையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 2016 ஆம் ஆண்டில் நடந்த … Read more