Month: January 2023
ஜெயலலிதா தொடங்கிய சிறந்த திட்டம்; அதையே நாங்கள் பின்பற்றுகிறோம்: அமைச்சர் பி.டி.ஆர்
ஜெயலலிதா தொடங்கிய சிறந்த திட்டம்; அதையே நாங்கள் பின்பற்றுகிறோம்: அமைச்சர் பி.டி.ஆர் Source link
சாலையில் நின்றிருந்த லாரி.. தானாக ஓடி விபத்துக்குள்ளானதில் 3 ஸ்கூட்டர்கள் சேதம்.!
ஈரோடு மாவட்டத்தில் சாலையில் நின்றிருந்த லாரி தானாக ஓடி விபத்துக்குள்ளானதில் மூன்று ஸ்கூட்டர்கள் சேதமடைந்துள்ளது. கோவை குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று ஈரோடு புஞ்சைபுளியம்பட்டிக்கு நேற்று மாலை வந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் குமாரபாளையம் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் புளியம்பட்டி சத்தியமங்கலம் சாலையில் உள்ள வங்கி அருகே சைக்கிள் கடையில் நிறுத்தினார். பின்பு அந்த கடையிலிருந்து வெல்டிங் கேஸ் சிலிண்டரை லாரியில் ஏற்றிய போது திடீரென லாரி இயங்கி தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. … Read more
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போதைய நிலை என்ன ? வெளியான முக்கிய தகவல்..!!
டெல்லியில் இருந்த ரிஷப் பண்ட் பல்வேறு பணிகளுக்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு அவர் ப்ரோமோஷன்ம் பணிகள் மற்றும் பயிற்சி தொடர்பான பணிகளை மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளானது. அங்கிருந்து டிவைடரில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அதிகாலை 5.15 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. … Read more
ஒசூர்: கத்தி முனையில் 15 பவுன் நகை திருட்டு; தப்பியோடிய மூவருக்கு வலை – தொடர் திருட்டால் அச்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (48). இவர் ஓசூர் நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முந்தினம் காலை, வழக்கம் போல ஓட்டலுக்கு சென்று விட்ட நேரத்தில், அவரின் மனைவி பாஸ்கல் ஜோஷ்வினா, மாமியார் லூர்து மேரி மற்றும் மாமனார் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க, 3 இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்து, பாஸ்கல் ஜோஷ்வினா மற்றும் லூர்து மேரி ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி, அவர்கள் … Read more
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறித்தவ தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற நள்ளிரவு பிராத்தனையில் திரளானோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு உலக அமைதி ,ஒற்றுமை ,அன்பு தவழ வேண்டிசிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவாரூர் புனித பாத்திமா … Read more
மதுரை, ராமேசுவரம், திருவண்ணாமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்
சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலர் பி.சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் பங்கேற்றனர். இதேபோல, காணொலி வாயிலாக மதுரையிலிருந்து வணிக வரி … Read more
யாத்திரையில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் அழைப்பு: ஜனவரி 3-ல் மீண்டும் தொடங்குகிறது
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கினார். அவரது பாத யாத்திரை 2,800 கி.மீ. தொலைவை கடந்து கடந்த டிசம்பர் 24-ம் தேதி டெல்லியில் தற்காலிகமாக முடிவடைந்தது. இந்நிலையில் 9 நாட்களுக்கு பிறகு ஜனவரி 3-ம் தேதி பாத யாத்திரை மீண்டும் தொடங்கி டெல்லி அருகே காஜியாபாத் வழியாக உ.பி.யில் நுழைகிறது. இந்த யாத்திரையை மீண்டும் தொடங்க வடகிழக்கு டெல்லியின் யமுனா பஜாரை காங்கிரஸ் … Read more
முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்” என்று வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வது தான் வாழ்க்கை. அந்த வகையில், கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. அதற்கு, முந்தைய ஆண்டுகளில் நம்முடைய மாநிலம் சந்தித்த மந்த நிலையை நாம் மாற்றிக் காட்டினோம். மக்கள் வாழ்வு மீண்டும் வளம் பெறத் … Read more
ஏழுமலையான் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருகை.. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக் கூறி மகிழ்ச்சி.!
திருப்பதி கோயிலில் நள்ளிரவில் 12 மணியளவில் புத்தாண்டையொட்டி கோயில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள், ‘ஹேப்பி நியூ இயர்’ என புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோஷமிட்டனர். பின்னர் கோயில் கோபுரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். சரியாக நள்ளிரவு 11.55 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் மூலவர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். Source link