இன்று முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

கொரோனா பரவல் மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், இந்தியாவிலும் மக்கள் முக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. இதைத்தொடர்ந்து, “புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார். மேலும், திருப்பதி அலிப்பிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரெயில் நிலையம் அருகே … Read more

‘அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்’ – ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: உலகின் நிலையான அமைதி மற்றும்நல்லிணக்கத்துக்காக உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நமது தேசம், 2023-ம் ஆண்டில் நம்பிக்கையுடனும், அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது. புத்தாண்டு நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கரோனா … Read more

குஜராத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

நவ்சாரி: அகமதாபாத் – மும்பை நெடுஞ்சாலையில் குஜராத்தின் வல்சாத் நகரை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் பரூச் மாவட்டம் அங்கலேஷ்வர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. நவ்சாரி மாவட்டம் வெஸ்மா என்ற கிராமத்துக்கு அருகில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரில் 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். பேருந்து பயணிகளில் … Read more

பாலஸ்தீனர்களின் உரிமை மீறல் – ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா

நியூயார்க்: பாலஸ்தீன நிலப் பகுதியை இஸ்ரேல் நீண்ட காலமாக ஆக்கிரமித்திருப்பது மற்றும் இணைத்திருப்பதன் சட்டரீதியான விளைவுகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை கோரும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்டது. கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ் தீனப் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களின் உரிமைகளைப் பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறை கள் குறித்த இந்த வரைவுத் தீர்மானம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 87 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 26 … Read more

200க்கும் மேற்பட்ட ரஷ்யா-உக்ரைன் சிறைக் கைதிகள் பரிமாற்றம்! ஆனந்த கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி தருணம்

புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்ட பின்னர், உக்ரேனிய கைதிகள் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கைதிகள் பரிமாற்றம் ரஷ்யா – உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு நாடுகளும் 200க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்தன. உக்ரைன் மொத்தம் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது. அதேபோல், ரஷ்யா 140 உக்ரேனியர்களை ஒப்படைத்ததாக உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியான … Read more

சென்னையில் குருவாயூர்

சென்னை- நங்கநல்லூரில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும், மிகவும் அழகாக, கேரள பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தைப் பார்க்கும்போதே ஒரு நிம்மதி பரவுகிறது. ஸ்ரீகுருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் எனும் அமைப்பினரால், சுமார் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது இந்த ஆலயம். வருடத்தின் முக்கியமான பண்டிகைகளும் விரத காலங்களும் இங்கு முறையே அனுஷ்டிக்கப்பட்டு, அந்த நாட்களில் ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் கோலாகலமாக நடைபெறுகின்றன. திருமண பாக்கியம், பிள்ளை … Read more

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மர்மநபர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரின் மகால் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் ெசல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார். குண்டு வைத்து அலுவலகத்தை தகர்த்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க செய்யும் குழு மற்றும் மோப்ப நாய் உடனான குழுவினர் அங்கு விரைந்தனர். அலுவலகம் … Read more

ஊரார் வீட்டில் ரெண்டகம் செய்வது அநாகரீகமான செயல் – தாமரைக்கு விஜி பழனிச்சாமி பதில்

ஊரார் வீட்டில் ரெண்டகம் செய்வது அநாகரீகமான செயல் – தாமரைக்கு விஜி பழனிச்சாமி பதில் Source link

நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து…!

2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, 2023 ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் … Read more