ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கு: ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின்!

ஏர் இந்தியா விமானத்தில், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியின் இருக்கை அருகே நின்று அவர் … Read more

Atlee: அட்லீ – ப்ரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது..குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. ஆர்யா, ஜெய், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அட்லீக்கு தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு தன் இரண்டாவது திரைப்படமே தளபதியின் படமாக அட்லீக்கு அமைந்தது. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படம் மெகாஹிட் வெற்றியை பெற்றது … Read more

”கூகுளின் பணி நீக்கத்தில் இது ஒரு ரகம்..” ஒருமாத பெண் குழந்தைக்கு புட்டி பால் புகட்டிக் கொண்டிருந்த போது பணிநீக்கம்..!

தனது ஒருமாத பெண் குழந்தைக்கு புட்டி பால் புகட்டிக் கொண்டிருந்த போது தான் கூகுள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான இ-மெயில் செய்தியை தெரிந்துக் கொண்டேன் என்று சமூகவலைத்தளத்தில் கூகுள் ஊழியர் பகிர்ந்துள்ளார். பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், தங்களது பணிநீக்க அறிவிப்பை எவ்வாறு பெற்றார்கள் என்பதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த நிக்கோலஸ் டுஃபாவ் என்ற கூகுள் சட்டப்பணியாளர், அதிகாலை 2 மணிக்கு பணிநீக்க செய்தியை அறிந்ததாக … Read more

காதலிக்கு முதல் முத்தம் கொடுத்தபோது கழுத்தை நெறித்த 12 வயது சிறுவன்: அதிரவைக்கும் தகவல்கள்

12 வயதுள்ள தன் ஆண் நண்பன், தனக்கு முதல் முத்தத்தைக் கொடுக்கும்போது, தனது கழுத்தை நெறித்ததாகக் கூறியுள்ளார் ஒரு சிறுபெண். அதிரவைக்கும் தகவல்கள் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்தில் ஒரு சிறுபிள்ளை, தனக்கு ஒன்பது வயதே இருக்கும்போது முதல் ஆபாசப்படத்தைப் பார்ப்பதாக அதிரவைக்கும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்துக்கான சிறுவர் ஆணையர். இங்கிலாந்துக்கான சிறுவர் ஆணையரான Dame Rachel de Souza, ஆபாசப்படங்கள் பார்க்கும் பழக்கம் சிறுபிள்ளைகளிடையே பரவலாகக் காணப்படுவதாகவும், அவற்றில் காணப்படும் விடயங்கள் உண்மை … Read more

மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை முதல் மாமல்லபுரம் வருகை தருகின்றனர். இவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களான ஐந்து ரதம், அர்ஜுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக, மாமல்லபுரம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், ரிசார்ட்களின் உரிமையாளர்கள், மேலாளர்களை … Read more

முதல்வர் வருகையையொட்டி வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை

சென்னை: முதல்வர் வருகையையொட்டி வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கூட்ரோடு வழியாக வேலூர் செல்லவேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ளனர்.

மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்

புதுடெல்லி: மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில், தகவல் யுத்தத்தை பிபிசி நிறுவனம் நடத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அங்கு நடந்த கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆவணப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படத்திற்கு ரஷ்யா … Read more

குஜராத் மோர்பி பாலம் வழக்கு – ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்

குஜராத் மாநிலம் மோர்பி பாலம் இடிந்து விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேல், மோர்பியில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில், 135 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கடந்த வாரம் 1,262 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள … Read more

தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர்

தெலுங்கில் காமெடி நடிகராக இருப்பர் சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் தன்னைத்தானே பர்னிங் ஸ்டார் என்று அழைத்துக் கொள்வார். இவர் தற்போது தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்குகிறார். ரோபோ சங்கர், சுருதி சுக்லா, மொட்டை ராஜேந்திரன், சுரேகா வாணி, ஜிகர்தண்டா ராமச்சந்திரன், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சமீர் டாண்டன் இசை அமைக்கிறார். கோடீஸ்வர … Read more