மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும் – திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்! 

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என்று, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அவரின் அந்த கடிதத்தில், “தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், கருத்துமிக்க நாடகங்களைப் படைப்பதில் தமிழ்நாடு கண்ட பெர்னாட்ஷா, மக்கள் நலன் காக்கும் கொள்கைவழிப் பயணத்தில் மற்றொரு கார்ல் மார்க்ஸ் என உலகப் பேரறிஞர்கள் – பெருந்தலைவர்களுடன் ஒப்பிடத்தக்க உன்னதத் தலைவராம், நம் இதயத்தை அரசாளும் மன்னராம், காஞ்சி தந்த திராவிடத் தலைவராம் … Read more

பெண் சீடரை கற்பழித்த வழக்கு.. சாமியார் ஆசாரம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை..!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாரம் பாபு. இவர் தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்பவர். இவருக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறநகரில் உள்ள ஆசிரமத்தில், சூரத் நகரைச் சேர்ந்த ஒரு பெண், சீடராக இருந்தார். அவர் ஆசிரமத்திலேயே தங்கி இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை சாமியார் ஆசாரம் பாபு, தன்னை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு அப்பெண் போலீசில் … Read more

வைரலாகு வீடியோ..!! முதலையிடம் மாட்டிக்கொள்ளும் மானை காப்பாற்றும் யானை..!

தண்ணீர் பற்றாக்குறையால் யானை, மான் உள்ளிட்டவை எல்லாம் ஒரே இடத்தில் தண்ணீர் பருகி கொண்டிருந்தன . அந்த தண்ணீருக்குள் தான் முதலையும் இருந்திருக்கிறது என்பது அந்த மானிற்கு தெரியவில்லை. வேட்டைக்காக சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முதலை அதன் தந்திர வேலைகளையும் அரங்கேற்றியது முதலைகளை பொறுத்தவரை தண்ணீருக்குள் இருந்தால், அவற்றின் அசைவுகள் துளிகூட மேலே தெரியாது. எந்தவொரு சமிக்கையையும் காட்டாமல் புத்திசாலித்தனமாக இரைக்காக காத்துக் கொண்டிருக்கும். அப்படி தான் இந்தமுறையும் இரைக்காக காத்திருக்கிறது. மான் குட்டி … Read more

பாஜக ஆதரவு யாருக்கு ? நாளை அறிவிப்பு ..!!

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 471 நாட்கள் அண்ணாமலை தலைமையில் நடைபயணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான திட்டமிடல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆதரவு … Read more

“அரசியலமைப்பு சட்டத்தால்தான் நீதிபதியானேன்; அரசியலை அறிய வேண்டும்!” – மாணவர்களிடம் மாவட்ட நீதிபதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே வத்திராயிருப்பில் தனியார் சங்கத்தின் சார்பில் பள்ளி ஒன்றில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் புத்தக திருவிழாவை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். “அரசியலமைப்பு சட்டத்தால்தான் கல்வி என்பது கிராமத்திலும் கூட தனது கடையை திறந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தால்தான் நான் மாவட்ட முதன்மை நீதிபதியாக அமர்ந்து உள்ளேன். விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் … Read more

முதியவர் மீது பின்னால் வந்த கனிமவளம் ஏற்றி சென்ற மினி லாரி மோதி விபத்து… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் ஓரமாக சைக்கிளை நிறுத்திய முதியவர் மீது பின்னால் வந்த மினி லாரி மோதும் விபத்து காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இலஞ்சி நான்கு முக்கு பகுதியில், மாணிக்கம் என்ற முதியவர் மீது மோதிய மினி லாரி, ஓரமாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. முன்னால் சென்ற லாரியை, மினி லாரி ஓட்டுநர் முந்திச்செல்ல முயற்சித்ததால் விபத்து நேரிட்டது. காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

மதுரை மாநகராட்சியில் கருத்தடை பணி பாதிப்பால் பெருகிய தெரு நாய்கள்: குழந்தைகள், முதியவர்கள் அச்சம்

மதுரை: மதுரையில் மாநகராட்சி 100 வார்டுகளுக்கு 2 நாய் பிடிக்கும் வாகனங்களும், கருத்தடை செய்வதற்கு ஒரே ஒரு மருத்துவரும் மட்டுமே உள்ளதால் கருத்தடை அறுவை சிகிச்சைப் பணி பாதிக்கப்பட்டு தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரை மாநகராட்சியில் மட்டுமே 47,000 தெரு நாய்கள் இருந்துள்ளன. அதன்பிறகு தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதனால், தெரு நாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்க கூடும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெரு … Read more

“நாட்டில் நிகழும் மாற்றங்களை விளக்கியது குடியரசுத் தலைவரின் உரை” – பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: நாட்டில் பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து விளக்கும் வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரை இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது. இதை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், அரசின் திட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். வளர்ந்த நாடாக இந்தியா மாற … Read more

ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பதால் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு கல்தா – ராமதாஸ்

உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அவசரம் காட்டிய மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் தாமதம் காட்டக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 14-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆணையம் அதன் பணிகளை முடித்து பரிந்துரைகளையும் … Read more

‘முஸ்லிம் நடிகர்கள் தான்..!’ – கங்கனா ரனாவத்தின் லேட்டஸ்ட் சர்ச்சை.!

தமிழில், தாம்தூம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பேசும் தலைவி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து நடிகை கங்கனா ரனாவத் வன்முறை தூண்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருசில … Read more