ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, அத்தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமார் வேட்புமனுக்களை பெற்றார். … Read more